லொஸ் ஏஞ்சல்ஸ்ஸில் 12 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின!


லொஸ் ஏஞ்சல்ஸ்ஸில் ஏற்பட்ட தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

பாலிசேட்ஸ் உட்பட இன்னும் மூன்று இடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஹர்ஸ்ட் ஃபயர் மற்றும் லிடியா ஃபயர் மட்டுமே இதுவரை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கென்னத் தீ இப்போது 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

12,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஏற்கனவே தீயினால் நாசமாகிவிட்டன அல்லது சேதமடைந்துள்ளன. மேலும் 58,000 பேர் ஆபத்தில் உள்ளனர். கடந்த  செவ்வாய்கிழமை முதல் சுமார் 15,000 ஹெக்டேர் நிலங்கள் தீயில் கருகிவிட்டன. 100,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டை வழங்குவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

No comments