மட்டக்களப்பின் கிரான் பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் காணமால் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்படடுள்ளனர்.
நேற்று சனிக்கிழமையன்று மாலை (25) இவர்கள் கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு சென்றவேளை கோராவெளி புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கண்ணகி அம்மன் கோயில் வீதி கிரானைச் சேர்ந்த கா.குருபரன் (53) திகிலிவெட்டை சந்திவெளியைச் சேர்ந்த மா.விநாயகமூர்த்தி (71) என்ற முதியவருமே இவ்வாறு வெள்ளத்தில் காணாமல் போயிருந்தனர்.
இதன்போது சடலம் ஞாயிற்றுக்கிழமை காலை (26) கண்டு பிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
Post a Comment