மாவை வீட்டிற்கு செல்லாது பதுங்கும் தலைமைகள்!
மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ள நிலையில் உடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் பூதவூடல் மக்கள் அஞ்சலிக் காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் இறுதிக் கிரியை நடைபெறவுள்ளது.
இதனிடையே மாவையின் பூதவுடலிற்கு தமிழரசு கட்சி தலைவர்கள் பலரும் சென்று அஞ்சலி செலுத்த பின்னடித்துவருகின்றனர்.
மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றும், மட்டக்களப்பில் இருந்து யாராவது செல்லவிரும்பினால் அற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையினருக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சாணக்கியன் நேபாளத்தில் பதுங்கியுள்ளதாகவும் மாவையின் மரணவீட்டுக்கு மாவையுடன் முன்னர் முரன்டுபட்டவர்கள் செல்லமுடியாத நிலை அங்கு காணப்படுகின்றது. மாவையை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவரை மரணம் நோக்கி கொண்டுசென்றதான குற்றச்சாட்டுகள், பல தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் மீது ஆதரவாளர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
மாவையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அவரது மரணவீட்டுக்குவந்து அரசியல் செய்தால் அவர்கள் மீது தமது கோபத்தை வெளிக்காண்பிப்போம் என்று மாவையின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment