இலங்கையில் விலங்கும் கையிருப்பில் இல்லையாம்?
யோஷித்த ராஜபக்சவை கைதுசெய்தவேளை ஏன் அவருக்கு கைவிலங்கிடவில்லை என கேள்வி எழுந்துள்ள நிலையில் கைதுசெய்யப்படும் அனைத்து சந்தேகநபர்களுக்கும் கைவிலங்கிடவேண்டிய அவசியமில்லை என பொலிஸ் பேச்சாளர் புத்திக்க மானதுங்க தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்படும்போது சந்தேகநபர் எவ்வாறு நடந்துகொள்கின்றார் என்பதை பொறுத்து சந்தேகநபரை கைதுசெய்யும் அதிகாரி இதனை தீர்மானிப்பார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யோஷித்த கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அந்த படத்தை சிஐடியினரோ அல்லது பொலிஸாரோ எடுக்கவில்லை,யோஷித்தவின் நண்பர் அல்லது வேறுஒருவர் இந்த படத்தை எடுத்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment