காஸா மீதான நீர் அணுகல் இப்படுகொலையே: மனித உரிமைக் கண்காணிப்பகம்


காஸா பகுதியில் நீர் வழங்கும் உட்கட்டமைப்புகளைப் தேசப்படுத்தி பொதுமக்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதைத் துண்டித்ததன் மூலம்  இனபடுகொலைச் செயல்களைச் செய்ததாக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்தது.

குறிப்பாக அக்டோபர் 2023 தொடக்கம் இஸ்ரேலிய அதிகாரிகள் வேண்டுமென்றே பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிர்வாழ்வதற்குத் தேவையான போதுமான அளவு தண்ணீரை அணுகுவதைத் தடுத்துள்ளனர் என மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்று வியாழக்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்தது.

பல டஜன் கண்கான காசா மக்கள், மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள், நீர் மற்றும் சுகாதார வசதிகளில் பணியாளர்கள், அத்துடன் செயற்கைக்கோள் படங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றின் நேர்காணல்களை அடிப்படையா ஒரு வருடமாகத் திரட்டப்பட்ட ஆணவங்கள் அடிப்படையில் இந்த அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தயாரித்தது. 

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படும் சோலார் பேனல்கள் உட்பட சுகாதார வசதிகளை வேண்டுமென்றே சேதப்படுத்தியமை. மற்றும் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல்களை விரிவாக்கியததையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விபரித்தது.

இஸ்ரேலிய அதிகாரிகள் வேண்டுமென்றே காசாவில் உள்ள பாலஸ்தீனிய மக்கள் மீது 'வாழ்க்கையின் நிலைமைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அதன் உடல் அழிவைக் கொண்டு வரத் திட்டமிட்டம் போட்டமை போன்ற இவை எல்லாம் இன்படுகொலைச் செயல்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது.

இந்த அறிக்கையை இஸ்ரேல் பொய் நிறைந்தது என நிராகரித்தது. இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்புப் பிராச்சாரத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியது. அத்துடன் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் காசாவிற்கு தண்ணீர் மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு வசதியாக இருந்தது என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments