என்ன நடக்கிறது சிரியாவில்?
54 ஆண்டுகளாக சிரியாவை ஆட்சி செய்த பஷர் அசாத்தின் அரசுப் படைகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற மோதலுக்குப் பின்னர் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களும் அவர்களது கூட்டாளிகளும் வார இறுதியில் அலெப்போ, ஹோம்ஸ் மற்றும் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்ற ஒரு அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டனர்.
பல கிளர்ச்சிக் குழுக்கள் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதால் அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவிற்கு தப்பி ஓடிவிட்டனர். அங்கு அவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.
2011 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவும் ஈரானும் அசாத்தின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தன.
இப்போது சிரியாவின் இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்கும் கிளர்ச்சிக் குழு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS). முதலில் அல்-கொய்தாவின் ஒரு கிளையின் தலைவராக இருந்தார். அவர் தன்னை கடும் போக்காளர் இல்லை என்பதை அண்மைக்காலங்களாகக் காட்டி வந்தார். மற்றும் மத சிறுபான்மையினருக்கு மதிப்பளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
![]() |
| பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவின் ஒரு கிளையின் முன்னால் தலைவர் அல்அபு முகமது அல்-ஜோலானி |
கிளர்ச்சியாளர்களின் வடமேற்கு கோட்டையான இட்லிப்பில் அரசாங்கத்திற்கு எதிராக தலைமை தாங்கி போராட்டங்களை நடத்திய முகமது அல்-பஷீர் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆட்சியில் நீடிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
அசாத் வெளியேற்றப்பட்டதை அடுத்து 1974 ஆண்டு ஐ.நா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவிவத்து இஸ்ரேல் சிரிய எல்லைப் பகுதிகளுக்கு படையினரை அனுப்பி சிரிய இடங்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ளது.
அத்துடன் சிறியாவை பல கிளர்ச்சிக் குழுக்கள் முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் எதிர்காலத்தில் இந்த இஸ்லாமிய அமைப்புகள் எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு எதிராகத் திரும்பலாம் என்ற அச்சம் காரணமாக அவர்களின் கைகளுக்கு ஆயுதங்கள் சென்று விடக்கூடாது என்பதற்கா சிரியப் படைகளின் முக்கிய இராணுவ தளங்கள், இராணுவ ஆயுத தாளபாடங்கள், இராணுவ தளபாட களஞ்சியசாலைகள். நிலகீழ் ஆயுத களஞ்சியசாலைகள், கடற்படைத் தளங்கள், விமானப்படைத்தங்கள், வான்காப்பு சாதனங்கள், ரேடார் தளங்கள், ஆயுத உற்பத்தி நிலையங்கள், ஆராச்சி நிலையங்கள் பல கட்டமைப்புகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் இரவு பகலாக வான்வழித் தாக்குதல்கள் மூலம் அழித்து வருகின்றன. தற்போதுவரை 350 தாக்குல்கள் நடத்தப்பட்டுள்ளன.
![]() |
| முன்னாள் அரசாங்க எதிர்பாளரும் தற்போதைய இடைக்காலப் பிரதமர் முகமது அல்-பஷீர் |
இன்னொரு நாட்டின் இறையாண்மை மீறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு கிளர்ச்சி குழுக்கள் எந்தவித எதிர் குரலையும் பதியாது வேடிக்கை பார்த்து வருகின்றன.
சிரியாவில் எண்ணெய் வளம் நிரம்பிய கிழக்கு நகரமான டெய்ர் அல்-சூரை குர்திஷ் படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சிப் படைகள் தெரிவித்துள்ளன.
கிளர்ச்சிக் குழு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மார்ச் 2025 வரை வடமேற்கில் கிளர்ச்சி நிர்வாகத்தின் முன்னாள் தலைவரான முகமது அல்-பஷீர் தலைமையிலான ஒரு இடைநிலை அரசாங்கத்தை நியமித்துள்ளது.



Post a Comment