மாற்றம்:60 இலும் விசாரணை வரும்!
திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் வரும் 4ம் திகதி விசாரணக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே இலங்கை காவல்துறை செய்ய வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் என்பதை அரசுக்கு சொல்லிக் கொள்கின்றோம் என பொது அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
வழங்கப்பட்டுள்ள அறிவித்தல் தமிழில் உள்ளது ஆனால் இலங்கை காவல்துறையின் அச்சடிக்கப்பட்ட விணப்பத்தில் எங்குமே தமிழ் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment