அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு


புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளது.

சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட காணொளியில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிவில் சமூக ஆர்வலர்களால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (21) பாராளுமன்ற சபையின் ஆரம்ப அமர்வின் போது, ​​சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அவர் அமர்ந்திருந்ததையும், நாடாளுமன்ற ஊழியர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகர மறுத்ததையும் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.  

எம்.பி.யின் நடத்தை மற்றும் கருத்துகள் சமூக ஊடக தளங்களில் கூட தீவிர விவாதத்திற்கு உட்பட்டது என முறையிடப்பட்டுள்ளது.

கலாநிதி மருத்துவர் இராமநாதன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு இலக்கம் 17ஐ பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

No comments