தொலைதூர ஏவுகணை மூலம் ரஷ்ய நிரப்பரப்புகள் தாக்குதலை நடத்தியது உக்ரைன்
உக்ரைன் முதன்முறையாக ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை நோக்கி இங்கிலாந்து வழங்கிய Storm Shadow ஏவுகணைகளை ஏவியத் தாக்கியது.
உக்ரைனுக்கு வாஷிங்டனிடம் இருந்து அமெரிக்க வழங்கிய ATACMS ஏவுகணைகளை ரஷ்ய பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
உக்ரைனின் பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமெரோவ் தனது நாடு ரஷ்ய எல்லைக்குள் Storm Shadowஏவுகணைகளைப் பயன்படுத்தியதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்
இத்தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல் அச்சம் காரணமாக உக்ரைனின் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இத்தாலி, ஸ்பெயின், கிறீஸ் தூதரங்கள் அவசர அவரமாக மூடப்பட்டன. தங்கள் நாட்டு குடிமக்களை வீட்டுக்குள்ளே இருக்குமாறும் வெளியே செல்லவேண்டாம் என எச்சரித்தனர். பல மணி நேரத்தின் பின்னர் இத்தூதரங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
Post a Comment