மலேசியாவில் 26 புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு!

 


இந்த ஆண்டு சரவாக் முழுவதும் ஆராய்ச்சி திட்டங்களின் போது இருபத்தாறு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று மலேசியாவின் துணைப் பிரதமர் டத்தோ அமர் அவாங் தெங்கா அலி ஹசன் இன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆறு தவளைகளுக்கு அவை கண்டுபிடிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் அறிவியல் பெயர்கள் வழங்கப்பட்டன.

 முலுவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனங்களுக்கு 'லிம்னோனெக்டெஸ் முலுயென்சிஸ்' என்ற அறிவியல் பெயரும், பென்ரிசனில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினத்திற்கு 'லிம்னோனெக்டெஸ் பென்ரிசென்சிஸ்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஏனைய 20 இனங்களுக்கு உருவ அடையானம் தொடர்வதால் அவற்றுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை என அவாங் தெங்கா  தெரிவித்தார்.

புதிய இனத்தின் கண்டுபிடிப்பு சரவாக்கின் தவளை இனங்களின் செழுமையான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது என்று அவாங் தெங்கா மேலும் கூறினார்.

ஆகஸ்ட் 5 முதல் 9 வரை சரவாக்கில் நடத்தப்பட்ட ஹெர்பெட்டாலஜிக்கான 10வது உலக காங்கிரஸின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சி திட்டங்கள் இருந்தன.

ஹெர்பெட்டோபவுனாவின் (ஊர்வன, நில, நீர்வாழ் உயிரினங்கள்) ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மாநாட்டில், 72 நாடுகளில் இருந்து 1,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments