அநுர குமார திஸாநாயக்கவுடன் 30வருடம்!



ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நான் பாராளுமன்றத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக இருந்துள்ளேன் என்று முன்னாள் ஆளுநரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

 நான் அவருடன்தான் காலை, பகல், இரவு உணவுகளை உண்டுள்ளேன்.நாங்கள் எப்போதும் ஜனாதிபதியின் கட்சிதான். நாங்கள் அரசாங்கத்துடன் இருந்து பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.

ஜனாதிபதி ஊழல், இலஞ்சம் ஆகியவற்றை ஒழிப்பதாக கூறியுள்ளார். அத்துடன், பொருட்களின் விலைகளைக் குறைத்து, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இது போன்ற பல நல்ல விடயங்களை கூறியும் உள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என்றார்.

No comments