அர்ச்சுனா அரசியலுக்கு ஆப்பு!
புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட இராமநாதன் அர்ச்சுனாவின் பதவி பறிக்கப்படலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.அரச பணியாளரான அவர் முன்னனுமதியின்றி தேர்தலில் போட்டியிட்டமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றமையினாலேயே பதவியிழப்பு பற்றி பேசப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் அருச்சுனவிற்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
முறைப்பாடானது இன்றையதினம் வெள்ளிக்கிழமை சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்றைய தினம் (21) இடம்பெற்ற போது அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காணொளியில், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்துள்ளதனால் அவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் தமிழீழத்துடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டு அவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினரான அவர் நாடாளுமன்றில் நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Post a Comment