உயர்பாதுகாப்பு வலய காணி விடுவிப்பில் அரசியல்!
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் சிறு பகுதிகளை விடுவித்து தமது வாக்கு அரசியலுக்கு பயன்படுத்தும் சிங்கள தேசிய கட்சிகளது உத்தியை தேசிய மக்கள் சக்தியும் கையில் எடுத்துள்ளது.
தேசிய மக்களின் கட்சியின் பிமல் ரத்நாயக்க இன்று (08) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தநிலையில் பாலாலியில் மக்கள் சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளார்.சந்திப்பின் போது மக்கள் தங்களது எஞ்சிய பெருமளவிலான காணிகள், வீதிகளை இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரினர்.
இந்நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளையும் பார்வையிட்டிருந்தார். காணிகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரினால் தகவல் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்
கடந்த 34 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை துண்டுதுண்டாக விடுவிக்கும் தேர்தல் அரசியலை சிங்கள தேசிய கட்சிகளது உத்தியை தேசிய மக்கள் சக்தி காலத்திலும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
Post a Comment