மண்சரிவு அபாய எச்சரிக்கை !
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி பதுளை, கண்டி, மாத்தறை, நுவரெலியா, காலி , களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Post a Comment