ஹைட்டியில் கிரான் கிரிஃப் கும்பல் சுட்டதில் 70 பொதுமக்கள் பலி!
ஹைட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தின் வழியாக துப்பாக்கி ஏந்திய நபர்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6,000 க்கும் மேற்பட்டோர் தப்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இந்த மோசமான குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, முழு ஹைட்டிய தேசத்திற்கும் எதிரான தாக்குதல் என்று பிரதமர் கேரி கோனில் எக்ஸ் தளத்தில் கூறினார். பாதுகாப்புப் படைகள் அப்பகுதியை வலுப்படுத்துவதாகவும் கூறினார்.
கிரான் கிரிஃப் கும்பலின் தலைவரான லக்சன் எலன் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்றார்.
கடந்த வியாழக்கிழமை அன்று, பான்ட் சோண்டே நகரத்தில் தானியங்கி துப்பாக்கிகளைக் காட்டி துப்பாக்கி சூடு நடத்திய கும்பல் , பின்னர் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரான் கிரிஃப் கும்பலைச் சேர்ந்தவர்கள் தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்களைச் சுட்டதில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் சுமார் 10 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள்" என்று ஐநா மனித உரிமைகள் அலுவலக செய்தித் தொடர்பாளர் தமீன் அல்-கீதன் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கும்பல் குறைந்தது 45 வீடுகள் மற்றும் 34 வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பல குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தாக்குதல் நடத்தியவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களை தலையில் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொன்ற மக்களின் வீடுகளை எரித்தனர். கார்களை எரித்தனர்.
Post a Comment