மன்னாரில் களமிறங்கும் சாள்ஸ்


மன்னார் தேர்தல் தொகுதியை மையமாகக் கொண்டு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர்  வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த தெரிவுகள் யாவையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்றை தினம் மன்னார்  வருகை தந்து வேட்பாளர்களை இறுதி நிலைப் படுத்தியதாக தெரிய வருகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இத் தேர்தலில் இருந்து நான் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments