தமிழரசுக் கட்சி இரு அணிகளாக யாழில் போட்டி!
நாளை வெள்ளிக்கிழமை மதியம் நாடாளுமன்ற தேர்தலிற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாளாக உள்ள நிலையில் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஒரு அணியினர், வேட்பு மனுக்களை யர்ழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளனர்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் ஒரு அணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அவர்களுடன் சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஸ் ஆகியோரும் யாழ். மாவட்ட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை ஜக்கிய மக்கள் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளும் இன்று யாழில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதனிடையே சங்குச் சின்னம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தில் தமிழ் தேசியத்தின் திரட்சிக்காக பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கினார்கள்.
அந்த ஆதரவை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ளதாகவும் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment