இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்!
இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
பல இடங்களில் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்ததால், ஈரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் லெபனானுக்குள் நுழைந்ததாக அறிவித்தது.
IRGC, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்குப் பதிலடியாக தான் ஏவப்பட்ட ஏவுகணைகள் என்று ஈரான் கூறியது.
ஏவுகணைகள் ஏவப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், ஈரான் தாக்குதல் முடிந்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
Post a Comment