வவுனியாவில் மிளகாய் தூள் விசிறி வாள் வெட்டு தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு


வவுனியாவில் காணி பிரச்சனை வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி மதிக்கப்பட்டுள்ளார். 

ஓமந்தை கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

காணி ஒன்று தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக பிணக்கு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் காணிக்குள் மாமனும் மருமகனும் வேலை செய்து கொண்டிருந்த வேளை , காணிக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று  அவர்கள் மீது மிளகாய் தூளை விசிறி வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையி மற்றையவரை ஊரவர்கள் மீட்டு வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments