யேர்மனியில் ஆட்கடத்தல் கும்பலைத் குறிவைத்து தேடுதல்: காவல்துறையினரால் பலர் கைது!


யேர்மனியில் ஆட்கடத்தல் கும்பலைக் குறிவைத்து பரவலாக சோதனை நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டனர். 

துரிங்கியாவில் ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று சிரியர்களும் இரண்டு ஈராக்கியரும் அடங்குவர்.

ஜெனா நகரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.  சோண்டர்ஷௌசனி ஒருவரும், மற்றொருவர் பேட் சுல்சாவிலும் தடுத்து வைக்கப்பட்டனர்.

சட்டவிரோதமாக பணத்தினைப் பெற்று பால்கன் வழியாக யேர்மனிக்குள் வருவதற்கு உதவியதாகக் கருதப்படுகிறது. 

குறிப்பாக யேர்மனியின் கிழக்கு மாநிலமான துரிங்கியா மற்றும் ஜெனா நகரங்கள் காவல்துறையினரால் சல்லடை போட்டுத் தேடப்பட்டது.

ஆட்கடத்தும் இடங்கள் துரிங்கியாவில் 15 இடங்களிலும் ஜெனாவில் 10 இடங்களிலும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நபர்கள் ஆரம்பத்தில் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

பாடன்-வூர்ட்டம்பேர்க், சாக்சோனி-அன்ஹால்ட், ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் மற்றும் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய இடங்களில் தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக னாவில் உள்ள சிறப்பு GSG9 அலகுகள் உட்பட ஐந்து மாநிலங்களில் மொத்தம் 340 அதிகாரிகள் அணிதிரட்டப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நடவடிக்கைகளின் நோக்கம் குற்றங்களை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களைக் கண்டுபிடித்து கைப்பற்றுவதாகும் என்று கால்துறையினர் தெரிவித்தனர். 

குறிப்பாக ஆவணங்கள், மின்னணு சேமிப்பு சாதனங்கள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மையப்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

மொத்தத்தில் இந்த வழக்கில் 23 முதல் 57 வயதுக்குட்பட்ட 18 சந்தேக நபர்கள், சாரதிகள் உட்பட நிறுவன மயப்படுத்தப்பட்ட பலர் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களால் 140 பேர் கடத்திவரப்பட்டதாக விசாரணைகள் சுட்டிக்காட்டியுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்கள் ஸ்லோவாக்கியாவில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்ல சுமார் €700 (தோராயமாக $775) கேட்டதாக கருதப்படுகிறது. அண்டை நாடான யேர்மனிக்கு தொடர்ந்து போக்குவரத்துக்காக மேலும் 500 யூரோக்கள் வசூலிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பணமானது இடைத் தரகர்கள் ஊடாக செலுத்தப்பட்டது.

No comments