யேர்மனி கொலோன் நகரில் இரண்டாவது வெடிப்பு!
மேற்கு ஜேர்மனியின் கொலோன் (கேளின்) நகரில் இன்று புதன்கிழமை அதிகாலை ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக சிறிய வெடிப்பு ஏற்பட்டது.
நகரின் மையப்பகுதியில், கடைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த தெருவான எஹ்ரென்ஸ்ட்ராஸ்ஸில் உள்ளூர் நேரப்படி சுமார் 5:00 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். வெடிப்பு அடுத்து தீயை ஏற்படுத்தியது.
தீயை அணைக்க முயற்சித்த ஒருவர் காயம் ஏற்பட்டது. பின்னர் சாட்சியாக விசாரிக்கப்பட்டதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில், துணிக்கடையில் ஜன்னல்கள் நொறுக்கப்பட்டன. இந்த இடம் இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றொரு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தூரத்தில் உள்ளன.
இரண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டவில்லை
கடந்த வெடிப்பு நேற்று முன்தினம் திங்கள்கிழமை அதிகாலை இரவு விடுதிக்கு வெளியே நடந்தது. இடிபாடுகள் விழுந்ததில் துப்புரவு ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
கொலோனில் கடந்த திங்கட்கிழமை நடந்த வெடிப்புத் தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைத் தேடுகின்றனர். அவர் சம்பவ இடத்தில் எரியும் நீல நிற பையை வைப்பது போல் தெரிகிறது.
இன்ற புதன்கிழமை வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு கமராக்கள் எதுவும் நிலைநிறுத்தப்படவில்லை. அது கமெராவில் பதிவாகியுள்ளதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை எனவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.
Post a Comment