புது டெல்லியின் முதலமைச்சராகிறார் கல்வி அமைச்சர் அதிஷி


இந்தியாவின் தலைநகரான புது டெல்லியின் கல்வி அமைச்சராக இருக்கும்  அதிஷி  அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

தற்போதைய முலமைச்சாராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அப்பதவியிருந்து விலகுவதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஆளும் ஆம் ஆத்மி கட்சி இன்று செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை அறிவித்தது. 

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கெஜ்ரிவால், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற பின்னர், ஞாயிற்றுக்கிழமை பொது உரையில் பதவி விலகுவதற்கான தனது முடிவை தெரிவித்தார். 

மதுபான உரிமங்களுக்கு ஈடாக அவரது கட்சியினர் கிக்பேக் எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்.

No comments