இந்தியாவில் இருந்து யேர்மனி சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது!


வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தை துருக்கியின் எர்சுரம் நகரில்   அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவின் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் யுகே 27 விமானம் மும்பையில் இருந்து யேர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு சென்று கொண்டிருந்தது . அதில் 234 பயணிகளும் 13 பணியாளர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் அவரசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தின் கழிப்பறையில் "விமானத்தில் வெடிகுண்டு" என்ற வாசகத்துடன் கூடிய காகிதத் தாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் அவசரமாக உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவில் தரையிறக்கப்பட்டனர். 

விமானத்தில் தேடுதல் நடவடிக்கை இரவு 23.30 மணிவரை நடத்தப்பட்டது. இதன்பின்னர் வெடிகுண்டு மிரட்டல் ஆதாரமற்றது என்பதைக் கண்டறிந்தோம்.

எச்சரிக்கையைப் பெற்ற பிறகு, அதிகாரிகள் துருக்கியில் உள்ள ஓர்டு அல்லது ட்ராப்ஸோன் நகரங்களில் விமானத்தை தரையிறக்க திட்டமிட்டனர். ஆனால் விமானப் போக்குவரத்து காரணமாக விமானம் இறுதியில் எர்சுரூமுக்கு திருப்பி விடப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக எர்சுரம் விமான நிலையத்திலிருந்து மற்ற விமானங்கள் தரையிறங்குவதும் புறப்படுவதும் நிறுத்தப்பட்டன. அச்சுறுத்தல் விடுபட்டதை அடுத்து நிறுத்தப்பட்டது.

No comments