மூச்சுப்பேச்சின்றி வேதநாயகன் பதவிப்பிரமாணம்!
வட மாகாண புதிய ஆளுநராக முன்னாள் மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன்: இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் எளிமையாக நடைபெற்ற நிகழ்வில் நாகலிங்கம் வேதநாயகன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
முன்னதாக வடக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த பி.எஸ்.எம். சார்லஸ் தனது பதவியில் இருந்து கடந்த 23ஆம் திகதி இராஜினாமா செய்ததை தொடர்ந்தே வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்றுள்ளார்.
அரசியல்பழிவாங்கலையடுத்து முன்னதாக ஓய்வு பெற்றிருந்த வேதநாயகன் தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
அதேவேளை மத்திய மகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மாகாண ஆளுநராக முன்னாள் நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் சப்ரகமுவ ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment