மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பேரழிவை ஏற்படுத்தியது வெள்ளம்!!


போரிஸ் புயல் காரணமாக பெய்த மழை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தியது.

ஆஸ்திரியாவில் வெள்ள மீட்புப் பணியின் போது ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்தார் மற்றும் போலந்தில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஆஸ்திரியாவில் வியன்னாவைச் சுற்றியுள்ள பேரழிவுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ருமேனியாவில், சனிக்கிழமையன்று நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவரைக் காணவில்லை என்று பிரதமர் கூறுகிறார்.

அதே நேரத்தில் செக் குடியரசில் நான்கு பேரைக் காணவில்லை. குறிப்பாக வடக்கு மொராவியாவில் ஒரு ஆற்றில் காணாமல் போன காரில் மூன்று பேர் இருந்துள்ளனர். தெற்கு மொராவியாவில் வெள்ளம் நிறைந்த ஓடையில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவரைக் காணவில்லை.

போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் ஞாயிற்றுக்கிழமை ஒரு மரணத்தை உறுதிப்படுத்தினார்.


No comments