15:சந்திரகுமாருக்காக சஜித் வருகை!
தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அரசியல் போட்டியாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஏற்பாட்டினில் சஜித் ஆதரவு கூட்டமொன்று கிளிநொச்சியில் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது.
மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள் பிரதேசக் கிளைகள் மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக சி.சிறீதரன் அறிவித்துள்ளார்.
எனினும் சுமந்திரன் ஆதரவு தமிழரசுக்கட்சியினர் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment