சத்துருக்கொண்டான் சிக்கல்:பின்னால் பிள்ளையான்!

 


மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்படவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் புனர்நிர்மானம் செய்ய முற்பட்ட தமிழ் பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன..

தூபியில் இராணுவத்தினால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை உயிரிழந்தவர்களது குடும்பங்கள் பதித்தனர்.

எனினும், அதனை இலங்கை காவல்துறையினர் பலவந்தமாக கழற்றி எடுத்து அங்கு புனரமைப்பு செய்யவிடாது தடுத்ததையடுத்து முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

அதனையடுத்து அங்கு இலங்கை காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மிரட்டப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு செட்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக் கொண்டான் உட்படபிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்களை இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் 34வது நினைவேந்தல் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அதனை முன்னிட்டு சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில் நினைவேந்தல் 1990 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொதுமக்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நினைவு தூபியில் பதிக்கமுற்பட்டுள்ளனர்.

அதன்பொது அங்கு சென்ற இலங்கை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் கல்லெட்டை பதிக்க முடியாது என தடுத்த்துள்ளனர்.

இந்நிலையில் அக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பிலிருந்த பிள்ளையானின் தூண்டுதலிலேயே தேர்தல் வாக்களிப்பில் பொது வேட்பாளரிற்கு வாக்கு வீழ்வதை தடுக்கவென தூபி நிர்மாணத்தை தடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments