பிரான்சில் மிக வயதான ஒருவர் பிரதமராக நியமனம்! எதிர்க்கட்சிக் போராட்டத்திற்கு அழைப்பு!


பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக அதிபர் இமானுவேல் மேக்ரான் நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016 - 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் மைக்கேல் பார்னியர் (73).

இந்த நியமனம் மூலம் வரலாற்றில் 5-ஆவது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் பார்னியர் பெறுவார்.

பிரான்ஸ் அரசியல் வராலாற்றில் முதன்முறையாக வயதான பிரதமர் அரசை திறம்பட நிர்வாகிக்க முடியுமா , சீர்திருத்தங்களை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வியை அங்கு உள்ள கூட்டணியில் கேள்வியை எழுப்பி உள்ளன.

இந்நிலையில் அதிக ஆசனங்கள் பெறாத ஒரு வலதுசாரிக் கட்சியிலிருந்தும் நாடாமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவரை நியமித்ததை அடுத்தும். குறித்த கட்சி நான்கவது இடத்தில் உள்ள நிலையிலும் எதிர்க்கட்சிகள் மக்ரோனின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

No comments