ஒருவாறாக பொதுவேட்பாளரிற்கும் கூட்டம் சேர்ந்தது?



இன்று வவுனியாவில் இடம்பெற்ற பொதுவேட்பாளரிற்கான ஆதரவு கூட்டத்தில் மக்கள் திரண்டிருந்தனர்.கூட்டத்திற்கு அலை மோதிய மக்கள் வெள்ளம் குறித்து ஆதரவு கட்சிகள் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளன

இதனிடையே பொதுவேட்பாளரிற்கு ஆதரவளித்த அதிபர் ஒருவர் கைதாகியுள்ளார். முல்லைத்தீவில் தபால்   மூல வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை  ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் சனிக்கிழமை   கைது செய்யப்பட்ட   பாடசாலை அதிபர்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாக்குச்சீட்டில் புகைப்படம் எடுத்தததை அவதானித்த  தேர்தல் கடமையில் இருந்த குறித்த நிலையத்துக்கு பொறுப்பான    மேற்படி விடயமாக முல்லைத்தீவு  தேர்தல்கள் அலுவலகத்துக்கு  தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வந்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறித்த அதிபரின் தொலைபேசியை பெற்றுக்கொண்ட தோடு  இது தொடர்பில் பொலிஸாரிடம் பாரப்படுத்தினர்.

இந்நிலையில் குறித்த அதிபரை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் , முன்னெடுத்துள்ளனர்.

மூதூர் டிப்போவில் கடமையாற்றும் சாரதி ஒருவர் தபால் வாக்களிப்பு நிலையத்தில்   வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதனையடுத்து  வழக்குத் தாக்கல் செய்ய பணிப்புரை கிடைக்கும் வரை சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.




No comments