சஜித்தை நோக்கி பாயும் ரணில் தரப்பு!



ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றில் போட்டியிடப்போவதில்லையென்ற ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பினையடுத்து கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துவருகின்றனர்.

பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துவருகின்றனர்.

இதனிடையே ஜக்கிய மக்கள் சக்தியுடன் ஜக்கிய தேசிய கட்சியை இணைத்துக்கொள்ளவேண்டுமென்ற கோசம் வலுத்துவருகின்ற போதும் சஜித் பிறேமதாச இணங்கிவர மறுப்பதாக கூறப்படுகின்றது.

மறுபுறம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதுடன், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரணிலை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான்,கருணா தரப்பென பல தரப்புக்களும் நட்டாற்றில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments