திருமலை நீதிபதி வீட்டுக்கு!
வழக்கு நிலுவையிலுள்ள பெண் ஒருவரை தேடி இரவு சென்றிருந்த நிலையில் குற்றச்சாட்டப்பட்ட யாழ்ப்பாணத்து நீதிபதியொருவர் பதவியிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு வியாழக்கிழமை (12) பணி இடைநீக்க கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான முறைகேடு குற்றச்சாட்டை விசாரித்த நீதிச் சேவைகள் ஆணைக்குழு,அவரிடம் விளக்கம் கேட்டு அவரை பணி இடைநீக்கம் செய்தது.
அவரது இடத்திற்கு மாவட்ட நீதிபதியாக செயற்படுவதற்கு திருகோணமலை பிரதான நீதவான் இ.பயாஸ் ரசாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment