குமார் குணரட்ணத்தை தெரியாது:அனுர!

 


குமார் குணரட்ணத்தை அனுர இருட்டடிப்பு செய்ய முற்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்கள் உச்சமடைந்துள்ளது

தேசிய மக்கள் சக்தி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் மாணவர்கள் குழுவிற்கும் கலைப் பீடத்தில் கல்வி கற்கும் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களையும் கடந்த வியாழக்கிழமை (12) மாலை 06 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

குமார் குணரத்தினம் 1970 மற்றும் 1980 களில் இலங்கை அரசுக்கு எதிராக புரட்சிகர போராட்டங்களில் ஈடுபட்ட ஜேவிபியின் மூத்த உறுப்பினராக இருந்தார். ஆயுதமேந்திய கிளர்ச்சியின் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது (1987-1989) அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்..

குமார் குணரத்தினம் மாணவர் இயக்க தலைமையாக இருந்த போதே அநுரவை அரசியலுக்கு அழைத்து வந்தார். அவரைத்தான் அநுர தெரியாதென மறுதலிக்கிறார்.


No comments