லெபனானில் புதிய தாக்குதல்: வோக்கி டோக்கி வெடித்து: 37 பேர் பலி: 450 பேர் காயம்!

லெபனான் முழுவதும் வோக்கி டோக்கிகள் வெடித்ததில்ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 450 பேர் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை வோக்கி-டோக்கிகள், மடிக்கணினிகள் மற்றும் வானொலிகள் உட்பட எலக்ட்ரானிக் சாதனங்கள் மேலும் வெடித்ததில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 450 பேர் காயமடைந்தனர்.
சில இடங்களில் மகிழுந்தில் பொருத்தப்பட்ட வானொலி, உந்துருளி என பல எலக்ட்ரானிக் சாதனங்கள் வெடித்துச் சிதறின.
நேற்று செவ்வாய்க்கிழமை ஹிஸ்புல்லா உறுப்பினர்களுக்கு சொந்தமான பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் செவ்வாயன்று நடந்த குண்டுவெடிப்புகளில் ஹெஸ்புல்லா போராளிகளை குறிவைத்ததாக பல ஆதாரங்கள் கூறுகின்றன. இஸ்ரேல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இஸ்ரேலிய செயற்பாட்டாளர்கள் ஹெஸ்புல்லாவுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் தகவல் தொடர்பு சாதனங்களில் வெடிபொருட்களை புகுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Post a Comment