நாட்டை விட்டு தப்பியோடினார் ஷேக் ஹசீனா? இராணுவ ஆட்சி அறிவிப்பு!!


அரசாங்கத்திற்கு எதிராக வலுக்கும் மாணவர்களின் போராட்டத்தினால் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய நிலையில் அவர் அந்நாட்டிலிருந்து உலங்கு வானூர்தி மூலம் தப்பிச் சென்றுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நாட்டை விட்டு தப்பி ஓடிய  ஷேக் ஹசீனா இந்தியாவின்  டெல்லி அல்லது இங்கிலாந்தில் லண்டனிலும் அல்லது பின்லாந்து நாட்டிலும் தஞ்சமடைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

வங்காளதேசத்தில் போராட்டம் எதிரொலியாக, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவருடைய சகோதரி இருவரும் கோனோ பாபன் என்ற அரசு இல்லத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் - ராணுவ தளபதி வக்கார் பேச்சு

பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ராணுவ தளபதி வக்கார் மக்களிடையே பேசியதாவது:-

பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகிய நிலையில்  ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். நாட்டில் சட்டம் ஒழுங்கை இராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. 

மாணவர்கள், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாட்டில் அவசர நிலை மற்றும் ஊரடங்கு தேவையில்லை. இன்றிரவுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ய அவசியம் ஏற்படவில்லை. கலவரங்களால் பலரும் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம். வங்காள தேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய இராணுவம் துணை நிற்கும் அந்நாட்டின் இராணுவத் தளபதி வக்கார் மக்களிடையே பேசினார்.

No comments