நியூசிலாந்து மவோரி மன்னர் இறந்தார்!


நியூசிலாந்தின் மவோரி மன்னர் துஹெய்தியா அரியணையில் அமர்ந்து தனது 18 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடிய சில நாட்களில் மரணமடைந்தார். 

நியூசிலாந்தின் மவோரி மன்னர் கிங்கி துஹெய்தியா பூடாடௌ தே வீரோஹீரோ VII தனது 69வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். 

இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மவோரி மன்னர் துஹெய்தியா இறந்துவிட்டார். இச்செய்தியை Kiingitanga அல்லது Maori King இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் Rahui Papa இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்

இவரது இறப்புக்கு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் சார்லஸ் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்தனர்.

No comments