குகதாசனின் நல்லிணக்கம்:2கோடி கிடைத்தது!



இலங்கையின் தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன, ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  சண்முகம் குகதாசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  ஜனாதிபதி செயலகத்தில் தனித்து நேற்று புதன்கிழமை (31) சந்தித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் பல்வேறு தேவைகள் மற்றும் அபிவிருத்தி பற்றி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றே அவரும் இரண்டு கோடி ஒதுக்கீட்டை பெற்றுள்ளார்.

குகதாசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான மறைந்த இரா.சம்பந்தனின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு,தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுமார் பத்துக்கோடி வரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து நிதி ஒதுக்கீடுகளை பெற்றுள்ளமை தெரிந்ததே.


No comments