தந்தை செல்வாவிற்கு அஞ்சலி


தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.

தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதேவேளை முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் மாலை  3 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.





No comments