யாழில். சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இருவர் விளக்கமறியலில்


சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரு டிப்பார் வாகன சாரதிகள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

கிளாலி பகுதியில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி வந்த இரு சாரதிகளை எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து , கொடிகாம பொலிஸார் கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்ட இரு சாரதிகளையும் , மணலுடன் கைப்பற்றப்பட்ட அவர்களின் இரண்டு டிப்பர் வாகனங்களையும் கொடிகாம பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சாரதிகள் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , இருவரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

No comments