புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த படகில் தீ: 40 பேர் பலி!
ஹைட்டியின் வடக்கு கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த படகு தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 40 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலம் பலர் காயமடைந்தனர் என ஐ.நா நிறுவனம் கூறியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில் ஹைட்டியன் கடலோர காவல்படை 41 உயிர் பிழைத்தவர்களை மீட்டது. அவர்களில் 11 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) கூறியது.
80க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு, லபாடி துறைமுகத்தில் இருந்து 150 மைல் பயணத்தில் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு செல்லும் வழியில் புதன்கிழமை புறப்பட்டது என்று ஹைட்டியின் குடியேற்றத்திற்கான தேசிய அலுவலகத்தை மேற்கோள் காட்டி IOM தெரிவித்துள்ளது.
பயணிகள் டிரம் மற்றும் விஸ்கி குடித்துக் கொண்டிருந்தனர். இதிலிருந்து தீ எரியத் தொடங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இறந்தவர்களில் படகின் கேப்டனும் அடங்குவார் என்று கேப்-ஹைடியனில் உள்ள காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் அர்னால்ட் ஜீன் தெரிவித்தார்.
Post a Comment