முள்ளியவளையில் தீ விபத்து!


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை தெற்கு பகுதியில் நேற்று அதிகாலை 12.00 மணியளவில் வீடொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வீடொன்றிலேயே  நேற்று அதிகாலை 12.00 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

வீட்டின் கூரைப்பகுதியில் தீ பற்றி  எரியத்தொடங்கியுள்ளது. இதனால் வீட்டின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தை அறிந்த கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் மின்சார சபையினருக்கு உடனடியாக அறிவித்துள்ளனர்.

இதனைதொடர்ந்து விரைந்த மின்சார சபை ஊழியர்கள் வீட்டுக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

தீ பரவல் காரணமாக காயமடைந்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments