நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!!


அமெரிக்க காங்கிரசில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றிய சமநேரத்தில் அவருக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பாளர்கள் குழு நெதன்யாகுவின் உருவ பொம்மையை அமெரிக்கக் கொடிகளுடன் எரித்தனர். காசாவில் போர்நிறுத்தம் மற்றும் நெத்தன்யாகுவை கைது செய்யுமாறு கோரினர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கு கைதையும் கோரினர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தை கண்டித்தனர். நெதன்யாகுவை  கைது செய்ய அழைப்பு விடுத்தனர்.

குற்றவாளி நெதன்யாகு எங்கள் தலைநகருக்கு வருவதற்கும், காசாவில் குழந்தைகளைக் கொல்ல ஆயுதங்களை அனுப்பிய அரசியல்வாதிகளால் வரவேற்கப்படுவதற்கும் எங்கள் எதிர்ப்பைக் காட்ட நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று பாஸ்டனில் இருந்து வாஷிங்டனுக்குச் சென்ற மருத்துவர் கூறினார்.

No comments