அலையாகச் சென்ற ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் ஒரே இரவில் கியேவை தாக்கின


ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் அலையாகச் சென்று உக்ரைனின் தலைநகர் கியேவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் ஒலித்தன என்று உக்ரைனின் இராணுவத் தரப்பினர் தெரிவித்தனர்.

இன்று உக்ரேனிய வான் பாதுகாப்பு எதிரி ட்ரோன்களின் பாரிய தாக்குதலை எதிர்கொண்டு முறியடித்தது என்று விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கியேவின் இராணுவ நிர்வாகத்தின் தலைவரான Serhiy Popko , போரின் போது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஏழு மணி நேரம் நீடித்ததாக அவர் கூறினார்.

புதன்கிழமை காலை 6:30 மணிக்கு உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 30க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அழித்துவிட்டன என்று பாப்கோ மேலும் கூறினார்.

ரஷ்யப் படைகள் ஒரு குரூஸ் ஏவுகணை மற்றும் 89  ட்ரோன்களை ஏவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கியேவின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ டெலிகிராமில் நகரத்தின் மீதான தாக்குதல் பல திசைகளில் இருந்து வந்தது என்று பதிவிட்டுள்ளார்.

No comments