அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களை விரட்டிய ரஷ்யப் போர் விமானங்கள்!!
ரஷ்யாவின் எல்லையோரமான பேரண்ட்ஸ் கடற்கரையொட்டி அமெரிக்காவின் В-52Н ரக இரண்டு மூலோபாய குண்டு வீச்சு விமானங்களை ரஷய போர் விமானங்கள் விரட்டியடித்தாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு குண்டு வீச்சு விமானங்களும் அத்துமீறி எல்லையை நெருங்குவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ரஷ்யாவின் மிக்-29 மற்றும் மிக்-31 போர் விமானங்கள் துரத்திச் சென்று விரட்டியபின் அவர் தங்கள் பாதையை மாற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சம் கூறியது.
நடுநிலை நீர்நிலைகளுக்கு மேல் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிகளுக்கு இணங்க ரஷ்ய போர்விமானங்கள் விமானத்தை நடத்தின என்று ரஷ்யா விளக்கம் அளித்தது.
இது குறித்து பென்டகன் உடனடியாக பதிலளிக்கவில்லை.
உக்ரேனில் போரில் கடுமையான பதற்றம் நிலவும் நேரத்தில், ரஷ்யா தனது எல்லைக்கு அருகில் பறந்து கொண்டிருந்த நேட்டோ நாடுகளின் இராணுவ விமானங்களை துரத்தியடிப்பதும் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவதும் தொடர் கதையாக உள்ளது.
Post a Comment