இங்கிலாந்து சவுத்போட் வன்முறை: அஞ்சலி செலுத்தினார் பிரதமர்!
இங்கிலாந்து நகரமான சவுத்போர்ட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் காவல்துறையினருடன் மோதினர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஆத்திரமடைந்த பெரும் திரளான மக்கள் காவல்துறை அதிகாரிகள் மீது போத்தல்கள் மற்றும் கற்களை வீசினர் மற்றும் ஒரு மசூதிக்கு வெளியே ஒரு காவல்துறை சிற்றூர்திக்குத் தீ வைத்தனர்.
இக்கலவரத்தால் குறைந்தது 22 காவல்தறை அதிகாரிகள் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை சவுத்போர்ட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிறிது நேரத்திலேயே வன்முறை வெடித்தது.
17 வயதுடைய சந்தேக நபர், வேல்ஸைச் சேர்ந்த ஒரு இளைஞனாக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டவர். ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார் .
ஆனால் தாக்குதல் நடத்தியவர் படகு மூலம் இங்கிலாந்து வந்த புகலிடக் கோரிக்கையாளர் என்று இணையத்தில் தவறான தகவல் பரவியது. வன்முறைக்கு தவறான வதந்தியான தகவல்களே காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
வன்முறைக் கூட்டத்தினர் தீவிர வலதுசாரிக் குழுவான இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக்கின் ஆதரவாளர்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையின் காட்சிகள் ஒட்டுமொத்த அவமானம் பிரிட்டிஷ் உள்துறை செயலர் யவெட் கூப்பர் கூறியதுடன் அச்செயலைக் கண்டித்தார்.
பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் தாக்குதல் நடந்த இடத்தில் மலர்களை வைத்து அஞ்சலி செய்தார். இந்த சோகம் முழு நாட்டையும் தொடுகிறது என்று கூறினார்.
நம்மில் பெரும்பாலோர் நினைத்துப் பார்க்க முடியாது. ஒரு அப்பாவாக என்னால் கற்பனை செய்ய முடியாதது. கடுமையான வலி மற்றும் துக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு எனது மரியாதையை செலுத்த நான் இங்கு வந்தேன் என்றார்.
சில பார்வையாளர்கள் பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மரைப் பார்த்து கூச்சலிட்டனர். எங்கள் தெருக்களில் இன்னும் எத்தனை பேர் சாவார்கள் பிரதமரே? என்ற உரக்கக் கத்தி கேள்வி எடுப்பினர்.
Post a Comment