நேபாளம் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது!


நேபாளத்தில் இன்று புதன்கிழமை நடந்த விமான விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் விமானி காயமடைந்தார். விமானியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்ராவுக்கு சோதனை விமானம் புறப்பட்ட போது விபத்துக்குள்ளானது.

ஒரு வெளிநாட்டவர் உட்பட 18 போின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானம் புறப்பட்டு வலதுபுறம் திரும்பியதுடன், விமான நிலையத்தின் கிழக்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் காட்சிகள் சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களுடன் ஒரு பெரிய புகை மண்டலத்தைக் காட்டியது.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.

போதிய பயிற்சி மற்றும் பராமரிப்பின்மை காரணமாக நேபாளத்தின் விமானப் போக்குவரத்துத் துறை மோசமான பாதுகாப்புப் பதிவைக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து நேபாள விமான நிறுவனங்களையும் அதன் வான்வெளியில் இருந்து தடை செய்துள்ளது.


No comments