ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர்: பற்றி எரியும் எண்ணெய்க் குதங்கள்!
ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் ஹொடைடா துறைமுகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்தனர் என்று மருத்துவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமையன்று டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் உட்பட நூற்றுக்கணக்கான ஹூதி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹொடெய்டாவில் இப்போது எரிந்து கொண்டிருக்கும் தீ, மத்திய கிழக்கு முழுவதும் காணப்படுகிறது. இது மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாங்கள் சொல்லும் செய்தி என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறினார்.
இஸ்ரேல் தேவைப்படும் எந்த இடத்திலும் இதே போன்ற தாக்குதல்களை நடத்தும் என்று அவர் எச்சரிக்கை செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஹொடைடா துறைமுகத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புக் குழுக்கள் போராடிக் கொண்டிருந்தன.
துறைமுகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்கள் மற்றும் மின்சார வழங்கி மீதும் தாக்குதல்களை இஸ்ரெலின் எவ்.35 , எவ் 16 ரக போர் விமானங்கள் நடத்தின.
கடந்த அக்டோபரில் காஸாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கிய சிறிது நேரத்திலிருந்து ஹவுதிகள் செங்கடலில் வணிக கப்பல் போக்குவரத்தை ட்ரோன் தாக்குதல்களால் குறிவைத்து வருகின்றனர். இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து பல ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.
Post a Comment