ஆஸ்ரேலியாவில் குழந்தையைக் கொன்ற முதலையை ரேஞ்சர்கள் சுட்டுக் கொன்றனர்


ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் 12 வயது சிறுமியைக் கொன்ற 4.2 மீட்டர் (14-அடி) முதலை ரேஞ்சர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

கடந்த வாரம் 12 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் நீந்திக் கொண்டிருந்தபோது, ​​அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் உள்ள தொலைதூர பாலும்பா சமூகத்திற்கு அருகிலுள்ள மாங்கோ க்ரீக்கில் முதலையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 

தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுமியின் எச்சங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கொடிய தாக்குதலுக்குப் பிறகு வனவிலங்கு காவலர்கள் முதலையைப் பிடிக்க அல்லது சுட முயன்றனர். இது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வடக்கு பிரதேசத்தில் 2005 மற்றும் 2014 க்கு இடையில் முதலை தாக்குதல்களில் 15 பேரும், 2018 இல் மேலும் இரண்டு பேரும் இறந்துள்ளனர்.

No comments