பிரித்தானியாவில் நடனப் பட்டறையில் கத்திக்குத்து: 2 குழந்தைகள் பலி! 9 பேர் காயம்!!


லிவர்பூலுக்கு அருகில் உள்ள வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட் என்ற கடலோர நகரத்தில் இன்று திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற நடனப் பட்டறையில் புகுந்த 17 வயது இளைஞன் ஒருவன் பலரை கத்தியால் குத்தியதில் இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 6 பேர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளைப் பாதுகாக்க முயன்ற பொியவர்கள் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகக் மெர்சிசைட் காவல்துறையினர் தெரிவித்தனர்.

லங்காஷயரில் உள்ள பாங்கைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது பங்கரவாதத்துடன் தொடர்பானதாகக் கருதப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோடை விடுமுறை என்பதால் இங்கு 6 வயது முதல் 10 வயது வரையான குழந்தைகளுக்கு நடன வகுப்புகள் இடம்பெற்றன. இக்கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மற்றும் 13 நோயாளர் காவுவண்டிகள் மற்றும் தீயணைப்புப் படையினர் என அவசர பிரிவுகள் களத்திற்கு வந்தன.

No comments