கோத்தாவின் ஆசைநாயகிக்கு வந்த துன்பம்!



பியுமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு BMW ரக வாகனத்தை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நாவல பகுதியில் உள்ள கரேஜ் ஒன்றில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருளை இறக்குமதி செய்ததற்காக கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் இரண்டு மாடி வீட்டில் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மொடல் அழகி பியுமி ஹன்சமாலியால் விளம்பரப்படுத்தப்பட்ட சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையகத்தில் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியுமி ஹன்சமாலி அறிமுகப்படுத்திய ஸ்கின் whitening கிரீம் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பியுமி ஹன்சமாலியால் விளம்பரப்படுத்தப்படும் ஸ்கின் whitening கிரீம் பக்கின் மதிப்பு ரூ.35,000 என்று அவர் சமீபத்தில் அறிவித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட கட்டமைப்போ அல்லது சட்டமோ எதுவும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பதிவு செய்யப்படாத தயாரிப்புகளுக்கு எதிராக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையகம் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தடுத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments