கேரளாவில் நிலச்சரிவு: 63 பேர் பலி!


இந்தியாவின் தெற்கு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கி இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன . 

கனமழையால் வயநாடு மாவட்டத்தில் முழு கிராமங்களும் புதையுண்டு, சாலைகள் அடைக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

எட்டு உடல்களை மீட்டு இதுவரை 116 பேரை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜோர்ஜ் தெரிவித்தார்.

சீரற்ற மழை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று ஜோர்ஜ் எச்சரித்தார்.

No comments